Trending News

மும்பையில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – மும்பை – ஜனகீர்த்தி டொன்சிறி பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இதுவரையில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் 40 முதல் 50 பேர் வரையில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.

குறித்த பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Mahendran has reportedly escaped S’pore: Vasudeava

Mohamed Dilsad

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று(18) விடுவிக்கப்பட்டனர்

Mohamed Dilsad

ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி

Mohamed Dilsad

Leave a Comment