Trending News

95 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த இந்திய அணி

உலக கிண்ண கிரிக்கட் தொடரை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற ஒருநாள் பயிற்சி போட்டியில், ஒன்றில் இந்திய அணி 95 ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.
மேற்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் மகேந்திர சிங் தோனி 113 ஓட்டங்களையும் லோகேஸ் ராஹூல் 108 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
அந்த நிலையில் ,360 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 264 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Related posts

Twelve Prisons Officials Transferred

Mohamed Dilsad

Asia Cup: Gritty Bangladesh stun Pakistan to set up a summit clash with India

Mohamed Dilsad

Dissident AIADMK leader holds talks with TNA

Mohamed Dilsad

Leave a Comment