Trending News

கொட்டாஞ்சேனையில் கைதான தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களை விசாரிக்க அனுமதி

(UTV|COLOMBO) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் இஸ்மாயில் மற்றும் அலியார் மொஹமட் நியாஸ் ஆகிய இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாமல் பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இருவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

තැපැල් සේවක වර්ජනය ඇරඹේ

Mohamed Dilsad

World chess body accounts closed over president’s Syria sanctions

Mohamed Dilsad

වාහනවල තත්ත්වය පරීක්ෂා කිරීමේ වැඩසටහනක්

Editor O

Leave a Comment