Trending News

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வும் தெரிவிக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

 

 

 

Related posts

Sri Lanka seeks more jobs for skilled workers in Qatar

Mohamed Dilsad

‘Three-person’ baby boy born in Greece

Mohamed Dilsad

New Zealand Under-19s tour of Bangladesh called off – [IMAGES]

Mohamed Dilsad

Leave a Comment