Trending News

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
வடக்கிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
இதற்கமைய, இன்றைய தினம் முற்பகல் 9.30க்கு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.
பின்னர் முற்பகல் 10.30 அளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில், வீடமைப்பு, மீள்குடியேற்றம், உட்பட ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள்  குறித்து ஆராய உள்ளார்.
இதையடுத்து, பிற்பகல் 2 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர விபத்துப் பிரிவை திறந்துவைக்க உள்ளதுடன், 3 மணிக்கு பலாலி விமான நிலைய கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளார்.
பிற்பகல் 3.45க்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் உள்ள மயிலிட்டி கிராமத்தில் மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

பின்னர், 4.30 அளவில் காங்கேசன்துறை துறைமுக கண்காணிப்பு பணிகளில் பிரதமர் ஈடுபட உள்ளார்.

இதையடுத்து, நாளைய தினம் கிளிநொச்சி, மன்னாரிலும், நாளை மறுதினம் முல்லைத்தீவிலும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்க உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நுவரெலியாவில் குதிரை பந்தயம்

Mohamed Dilsad

GMOA suspend strike following talks with President

Mohamed Dilsad

SLTB special bus services from today

Mohamed Dilsad

Leave a Comment