Trending News

பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் 08 மாத குழந்தை வீதியில் இருந்து மீட்பு

(UTV|COLOMBO)-பிறந்து 08 நாட்களான குழந்தை ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் படி, மீரிகம – திவுலப்பிட்டிய வீதியில் விகாரை ஒன்றுக்கு அருகில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு அற்று இருந்த குழந்தை மீரிகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Auspicious times for Sinhala and Hindu New Year

Mohamed Dilsad

හොරණ වෙඩිතැබීමක්

Editor O

“Viyathmaga’s ‘Blue Print’, a “Castles in the Air” – Minister Mangala

Mohamed Dilsad

Leave a Comment