Trending News

மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரை

(UDHAYAM, GENEVA) – ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடரில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உரையாற்றவுள்ளார்.

இதேவேளை அமைச்சர் மங்களசமரவீர ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குற்றேஸை ((Antonio Gutterres ) நேற்று சந்தித்தார்.

இலங்கையில் சமகால அரசாங்கத்தின் கீழ் மனிதஉரிமைகள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் இந்த உரையில் சுட்டிக்காட்டவுள்ளார்

இலங்கை நேரப்படி அமைச்சர் மங்களசமரவீர இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சுவிஸ்லாந்திலுள்ள ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இளவரசர் தலைமையில் நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத்தொடர் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தொடர் மார்ச் மாதம் 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் அங்கத்துவ நாடுகளுக்கு பொதுவான முக்கியவிடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜனீவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மற்றும் தூதுவருமான ரவீநாத ஆரியசிங்க நில்லிணக்கம் பொறிமுறை தொடர்பான செயலகத்தின் பொதுச்செயலாளர் மனோ தித்தவெல வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐக்கிய நாடுகள் பிரிவின் பணிப்பாளர் நாயகமும் பேச்சாளருமான திருமதி மஹேசினி கொலன்னே ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

பௌத்த கொடியை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை

Mohamed Dilsad

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

உரிய முறையில் விவசாயிகளுக்கு நட்டயீடு கொடுக்கப்படவில்லை

Mohamed Dilsad

Leave a Comment