Trending News

அம்ப சுஜீ எனும் சஜித் குமார கைது

(UTV|COLOMBO)-இரண்டு மனித கொலைகள் உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அம்ப சுஜீ எனப்படும் ஜூலம்பிட்டி  சஜித் குமார காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை – பட்டியபொல பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், 5 கையடக்க தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தங்காலை – நெடோல்பிட்டிய வாகன திருத்தும் நிலையத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும் மூன்று கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

 

Related posts

Secret tunnel found in Mexico Prison

Mohamed Dilsad

VVIP Assassination Plot: CID records President’s statement; AG to study report

Mohamed Dilsad

Naval and fishing communities warned

Mohamed Dilsad

Leave a Comment