Trending News

கோஹ்லியால் இந்த சாதனையை செய்ய முடியுமா?

(UTV|INDIA)-இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, இன்று நடைபெறவிருக்கும் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்றால் இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் எல்லா போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை பெறுவார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

நடைபெற்று முடிந்த முதல் நான்கு ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

இத்தொடரின் இதுவரை நடந்துள்ள 4 ஒருநாள் போட்டியிலும் இந்திய கோஹ்லி தான் நாணய சுழற்சியில் வென்றுள்ளார்.

இதையடுத்து இன்று நடைபெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி நாணய சுழற்சியில் வென்றால் ஒரு தொடரின் எல்லா போட்டியிலும் நாணயசுழற்சியில் வென்ற அதிர்ஷ்டக்கார கேப்டன்கள் பட்டியலில், கோஹ்லி சேரலாம்.

அதுமட்டுமின்றி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் எல்லா போட்டியிலும் நாணய சுழற்சியில் வென்ற நான்காவது இந்திய கேப்டன் என்ற பெருமை பெறுவார். முன்னதாக, முகமது அசாருதின், ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

Mohamed Dilsad

Development Officer hacked to death

Mohamed Dilsad

Gotabaya meets Ranil amidst political turmoil

Mohamed Dilsad

Leave a Comment