Trending News

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது

(UTV|COLOMBO)-கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதோடு, இது மேலும் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே அந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Tendulkar’s son picked in India U-19 squad for Sri Lanka tour

Mohamed Dilsad

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்

Mohamed Dilsad

80 வயது முதியவராக விஜய்சேதுபதி…

Mohamed Dilsad

Leave a Comment