Trending News

பாடசாலை மாணவி செய்த காரியம்…!பதுளையில் சம்பவம்…!

(UTV|COLOMBO)-சுகயீனம் காரணமாக வைத்திசாலைக்கு சென்ற சிறுமி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள பதுளை பொது வைத்தியசாலைக்கு தனது தாயுடன் சென்றுள்ளார்.

இதன் போது குறித்த மாணவி கர்ப்பமுற்றுள்ளார் எனவும் அவர் குழந்தையை பெற்றெடுக்கும் காலம் அண்மித்து விட்டதாகவும் தெரிவித்த வைத்தியர்கள், மாணவியை மகப்பேற்று பிரிவில் அனுமதித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் மாணவி குழந்தையை பிரசவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட வைத்தியசாலை காவல் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்கள் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞரை கண்டறிந்துள்ளனர்.

குறித்த மாணவியின் உறவினர்களில் ஒருவரான 21 வயதுடைய இளைஞரே இதற்கு காரணம் எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்ய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Colombo HC decides to hear Hirunika case on 12 &13 March 2019

Mohamed Dilsad

US shutdown hits as working week begins

Mohamed Dilsad

Anura Kumara to be the JVP presidential candidate ?

Mohamed Dilsad

Leave a Comment