Trending News

இ. போ. ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தமது ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கு இடையில் நேற்று(16) மாலை இடம்பெற்ற மோதலின் போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதியை, தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் மற்றும் பேரூந்து உரிமையாளர் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தின் சாரதி சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

Mohamed Dilsad

Pope Francis apologises to Roma for Catholic discrimination

Mohamed Dilsad

சீன ஜனாதிபதி வடகொரியா விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment