Trending News

மாலிங்கவை மும்பை எடுக்காமைக்கான காரணம் இதுவே -மஹேலவின் கருத்து

(UTV|COLOMBO)-அணி சார்பில் கடந்த 05 வருடங்களுக்கு அணியினூடாக விளையாடாததால் 2018ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லசித் மாலிங்கவை உள்வாங்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன விளையாட்டு இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், லசித் மாலிங்கவின் திறமை காரணமாக மாலிங்கவை ஆலோசகராக அணிக்கு சேர்த்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மாலிங்கவை மும்பை அணி வாங்காதது ஏன்?

“ஐ.பி.எல். இற்கு முன்பதாக ஒரு அணி சார்பில் 05 வருடங்கள் விளையாடிய வீரர்களையே நாம் தேர்ந்தெடுத்தோம். அதன்படி மாலிங்க உள்வாங்கப்படவில்லை. ஏலத்தில் நோக்கும் போது மாலிங்கவை எந்த அணியும் வாங்கவில்லை என்பது தெரிந்தது. அதற்கு காரணம் லசித் மாலிங்க உபாதையில் இருந்து மீண்டு வந்தமையே ஆகும்.. அச்சந்தர்ப்பத்தில் அவர் ஒழுங்காக விளையாடி இருக்கவில்லை.. நாம் தேர்வு செய்வது தேசிய அணியில் உள்ள வீரர்களையே.. பயிற்சியாளர் என்ற ரீதியில் எனக்கு பொறுப்புக்கள் உள்ளன.. அதனையே நான் செய்தேன். என்றாலும் நாம் அவரது திறமைக்கு முக்கியத்துவம் வழங்கி எமது அணிக்கு ஆலோசகராக இணைத்துக் கொண்டோம். அதன்படி தான், நான் மாலிங்கவை பந்து வீசும் ஆலோசகராக நியமிக்க நடவடிக்கை எடுத்தேன்”

மும்பை அணி கைவிட்டதா இலங்கை அணியும் மாலிங்கவை சேர்க்காமல் இருக்கக் காரணம்..

“மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்யாமையானது இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளாமைக்கு காரணமாக இருக்காது என நான் நினைக்கிறேன். இலங்கை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இரு வேறு அணிகள், இரண்டையும் ஒருபோதும் சமனாக நினைக்க முடியாது. இரு கோணங்கள். இலங்கை அணியில் தற்போதுள்ள வீரர்களை விட மாலிங்க அணிக்கு பொருத்தமானவர், அவரை தெரிவு செய்வது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவினால் மாத்திரமே முடியும்”

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

President extends term of Navy commander

Mohamed Dilsad

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

Mohamed Dilsad

Finance Ministry announces MRP for rice

Mohamed Dilsad

Leave a Comment