Trending News

ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூடு 2 பேர் பலி

(UTV|COLOMBO)-கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்ட வீதியில் நேற்றிரவு 8.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

58 வயதுடைய செல்வையா செல்வராஜ் என்பவரும் 50 வயதுடைய எலிசபத் பெரேரா என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாகிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டாஞ்சேனைப் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் இரு குழுக்களிடையே நீண்ட காலமாக நிலவி வரும் பகைமை இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය ඉදිරි මැතිවරණවලට පුටුව ලකුණෙන්

Editor O

President’s Chief of Staff & STC chairman further remanded

Mohamed Dilsad

சாதாரணதர பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் அடுத்த வாரம்

Mohamed Dilsad

Leave a Comment