Trending News

கோலமாவு கோகிலா படத்தின் சென்சார் வெளியீடு

(UTV|INDIA)-நயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்’ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து `எதுவரையோ’, கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா தற்போது `கொலையுதிர் காலம்’, அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Tamil Nadu fishermen claim they were chased away by Sri Lankan Navy

Mohamed Dilsad

கர்ப்பமானதாக வெளியான தகவல் – இலியானா

Mohamed Dilsad

Two spill gates opened in Laxapana Reservoir

Mohamed Dilsad

Leave a Comment