Trending News

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்த வழிமுறைகள் சம்பந்தமாக முறையான விசாரணை ஒன்றை நடத்துமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

நேற்று  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சீனா பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வேறு நாடுகளில் இருக்கின்ற வர்த்தகர்கள் மற்றும் பெரிய வர்த்தகர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் சட்டவிரோத தொடர்புகளை வைத்திருந்ததாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த வர்த்தகர்களால் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்கு நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Writ petition against death sentence filed

Mohamed Dilsad

A new project to implement water and solar power methods for Mahaweli settlers

Mohamed Dilsad

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment