Trending News

கொட்டாஞ்சேனையில்-ஜெம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே காயமடைந்துள்ள நிலையில் அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தனிப்பட்ட தகராறு ஒன்றின் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

NCPA says no children be used for election activities

Mohamed Dilsad

වන සත්ත්ව සංගණන වාර්තාව අද එළි දැක්වේ

Editor O

Ruhuna Uni. students further remanded over ragging incident

Mohamed Dilsad

Leave a Comment