Trending News

கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு உடன்படிக்கை

(UTV|COLOMBO) பொதுமக்களுக்கு மிகவும் துரிதமாகவும் பாதுகாப்பானதுமான போக்குவரத்து வசதிகளை செய்யும் நோக்கில் கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரர்களுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த நிர்மாணப் பணிகளுக்காக தேவையான நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அங்கேரிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

அதற்கமைவாக இந்த திட்டத்திற்கு தேவையான 52 மில்லியன் யுரோக்கள் நிவாரணக் கடன் தொகையை அங்கேரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் பெற்றுக் கொள்வதற்காக இந்த வங்கியுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

இலங்கையின் மாபெரும் நீச்சல் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

Mohamed Dilsad

No damage to heritage sites- PM Wickremesinghe

Mohamed Dilsad

திமிங்கலங்களை பார்வையிடுவதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment