Trending News

அவர் ஒரு சூப்பர் பெண்மணி சேவாக் புகழாராம்

(UTV|INDIA)-மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லட்சுமி வெர்மா (72) என்ற பெண்மணி டைப்-ரைட்டிங் வேலை செய்து வருகிறார். இந்த வயதிலும் அவரின் மிக வேகமாக டைப்பிங் செய்யும் திறமை உடையவர். லட்சுமி வெர்மா செய்யும் வேலையை வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து அவரைப் பேட்டியெடுக்க ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்தர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்திருந்த வாழ்த்து செய்தியில், “என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சூப்பர் பெண்மணி. மத்தியப்பிரதேச மாநிலம் சிஹோரில் வாழ்ந்து வரும் அவரிடம் இருந்து இளைஞர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். வேகத்தை மட்டுமல்ல, உற்சாகமான மனநிலை, கற்பதற்கும், செய்வதற்கும் வேலையோ, வயதோ தடையில்லை என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு மரியாதையுடன் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Raids to curb production of banned polythene continues

Mohamed Dilsad

“President’s visit will boost Australia-Srilanka ties,” says High Commissioner

Mohamed Dilsad

දෙහිඅත්තකණ්ඩිය සමූපකාරයෙන්, මාලිමාව පහළට ඇදවැටේ.

Editor O

Leave a Comment