Trending News

முக்கிய மைல்கல்லை தொட்ட சாமி ஸ்கொயர் டிரைலர்

(UTV|INDIA)-ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்துள்ளன.

இந்த டிரைலருக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மறுபுறத்தில் நெட்சன்கள் டிரைலரை கிண்டல் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில், `சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. பெரும் எதிபார்ப்புக்கு இடையே வெளியான இந்த டிரைலரை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்த்துள்ளனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

Mohamed Dilsad

Fire at Mumbai complex kills 14 people

Mohamed Dilsad

நுவரெலியா – ஐஸ்கட்டி போட்டி

Mohamed Dilsad

Leave a Comment