Trending News

விஸாவை ரத்துச் செய்யுமாறு பிரித்தானிய அரசிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)-பிரித்தானியாவில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக பணிப்புரிந்த பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விஸா அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை , பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுதொடர்பில் உலக தமிழர் பேரவையினால் அனுப்பட்டுள்ள கடிதத்தில், பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்ப அழைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் விஸா அனுமதியையும் ரத்துச் செய்ய வேண்டும் எனவும் உலக தமிழர் பேரவையின் ஊடக பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த கடிதத்திற்கு பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் தெற்காசியாவுக்கான திணைக்களம் பதில் வழங்கியுள்ளது.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதுதொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை நேரடியாக தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்ததாகவும் அந்த பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, குறித்த சம்பவத்தை அடுத்து பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

8 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Sale of individual cigarettes to be banned?

Mohamed Dilsad

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்க கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment