Trending News

பொல்லால் அடித்து ஒருவர் கொலை

(UTV|RATNAPURA)-பெல்மடுள்ள, குட்டாபிட்டிய பகுதியில் பொல்லால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றவரை பொல்லால் அடித்து கொலை செய்து பின்னர் அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெல்மடுள்ள பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிரிந்தி ஓயாவில் மீட்கப்பட்டுள்ளது.

பெல்மடுள்ள, குட்டாபிட்டிய பகுதியை சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவரை கைது செய்ய பெல்மடுள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Thilakarajah explains Gammanpila’s statement on Indian supremacy [VIDEO]

Mohamed Dilsad

என்னால் சாதாரண பெண்ணாக இருக்க முடியாது

Mohamed Dilsad

‘Matara Malli’ arrested in Ratmalana

Mohamed Dilsad

Leave a Comment