Trending News

கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் – பிரதமர்

(UTV|COLOMBO)-பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய விசேட உரையின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊழல் மோசடிகளை நிறுத்துவதற்காகவே அதிகாரத்திற்கு வந்தோம். கட்சி, நிறம், பதவி எதுவாக இருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர்   திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுற்படுத்த உயர்ந்த பட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  என்றும்  பிரதமர் தெரிவித்தார்.
திறைசேரி முறிகள் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நேரத்தில் இருந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான உயர்ந்த பட்ச ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த ஆரம்பமாகும். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மாத்திரமின்றி தற்காலத்தில் முன்வைக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். திறைசேரி முறிகள் தொடர்பான மோசடிகளுடன் தொடர்பு பட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புபட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சர் திலக் மாறப்பன தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. திறைசேரி கொடுக்கல் வாங்கலின் மூலம் பேப்பச்சுவல் றெஸறீஸ் நிறுவனம் முறைகேடான விதத்தில் தொள்ளாயிரத்து 20 கோடி ரூபாவை திரட்டியிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கி உரிய நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரத்து 200 கோடி ரூபாவை கையிருப்பில் வைத்திருக்கின்றது. இதற்காக ஆணைக்குழுவின் யோசனைகளை பின்பற்றவிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Can Achieve SDGS Easily If We Enlist Coops

Mohamed Dilsad

US did not approve Turkey’s Syria offensive, says Mike Pompeo

Mohamed Dilsad

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

Mohamed Dilsad

Leave a Comment