Trending News

தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்திக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்

(UTV|COLOMBO)-இலங்கைக்கு விஜயம்செய்துள்ள  இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை  அமைச்சர் ரவிசங்கர் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் தொடர்பாக நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக இலங்கை வந்துள்ள இந்திய அமைச்சர் இந்த சந்திப்பின் போது தகவல் தொழில்நுட்பத் துறையின் அபிவிருத்திக்கான புதிய போக்குகளை இலங்கை இனங்காண இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவித்தார்;.
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாடசாலை பாடத்திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த பாடுபட்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் இலங்கைப் பிரதமரும் இணைவதாக இந்திய அமைச்சர் கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு ரெப் கணனிகளை வழங்கும் திட்டம் குறித்து பிரதமர் விளக்கமளித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රනිල් වික්‍රමසිංහ ජනාධිපති ධූරයේ සිටියානම් එක දුරකථන ඇමතුමකින් කළ හැකි දේ ගැන රාජිතගෙන් ප්‍රකාශයක්

Editor O

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்

Mohamed Dilsad

North Korea test-fires ballistic missile after South Korea leader pledges dialogue

Mohamed Dilsad

Leave a Comment