Trending News

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம்

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக நடைபெற்ற போட்டிப்பரீட்சைக்கு 6000 பேர் அளவில் தோற்றியிருந்ததார்கள். அவர்களுள் சுமார் 2500 பேர் சித்தியடைந்துள்ளனர். அவர்களுள் உரிய தகைமைகள் கொண்டவர்களுக்கு இம்மாதம் 25ம் திகதி பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை ஆங்கில டிப்ளோமாதாரர்கள் 172பேருக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் இம்மாதம் 26ம் திகதி மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

சேவைகள் வழங்குகின்றபோது இன மத மொழி வேறுபாடுகள் கருத்திற் கொள்ளப்படாது நீதி நியாயமான முறையில் சகல செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். கிழக்கு மாகாணத்தை சகல துறையிலும் கட்டியெழுப்புவதே தமது அபிலாசையும் பிரதான நோக்கமும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Lieutenant-General Shavendra Silva’s appointment: Can impact SL’s contribution to UN peacekeeping efforts: UNHR Chief

Mohamed Dilsad

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 12-வது முறையாக தொடர் வெற்றி

Mohamed Dilsad

ජීනිවාහි මානව හිමිකම් කවුන්සිලයේ සැසිවාරයේදී ශ්‍රී ලංකාව ගැන කතා කරයි.

Editor O

Leave a Comment