Trending News

கிரீடா சக்தி வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – கிரீடா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைகளின் தேகாரோக்கிய மேம்பாட்டிற்கென கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வு பிரதேச செயலாளர் s.சுதாகரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விளையாட்டுக்களில் திறமை வாய்ந்த பாடசாலை மற்றும் ஏனைய விளையாட்டு வீர வீராங்கனைகள் உடல் ஆரோக்கியம் மற்றும் போசனை மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் இந்த கொடுப்பனவு மாதந்தோறும் விளையாட்டு அமைச்சினால் வழங்கப்படுகின்றது.

இதன் போது 83 வீர வீராங்கனைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதல் போட்டியில் ரஷியா வெல்லும் – அசிலிஷ் பூனை கணிப்பு

Mohamed Dilsad

நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?

Mohamed Dilsad

O/L, A/L Candidates requested to obtain NICs without delay

Mohamed Dilsad

Leave a Comment