Trending News

விமான விபத்தில் நடிகர் ஷாருக்கான் பலியா? உண்மை விபரம் இதோ

(UDHAYAM, COLOMBO) – பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் பலியாகிவிட்டதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்நிலையில் ஷாருக் பற்றிய வதந்தி தீயாக பரவியது.

பாரீஸில் தனது உதவியாளர்களுடன் ஷாருக்கான் தனி விமானத்தில் பயணம் செய்த போது விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் அவர் பலியானார் என்ற வதந்தி தீயாக பரவியது.

ஷாருக்கான் பயணம் செய்த விமானத்தின் எண், நிறுவனத்தின் பெயர் எல்லாம் குறிப்பிட்டிருந்ததால் பலர் அது உண்மையோ என நினைத்து கவலை அடைந்தனர்.

இந்தியாவின் சில ஊடகங்களிலும் அவர் விமான விபத்தில் உயிரிழந்தார் என செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

எனினும் ஷாருக்கானுக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமாக உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்களை பற்றி மரண வதந்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

திருமண வாழ்க்கை கசந்து போனதால் ஐஸ்வர்யா ராய் தற்கொலை செய்து கொண்டார் என்று முன்பு வதந்தி பரவியது.

பின்னர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டு ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தி பரவியது.

ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன் இறந்ததாக கூட வதந்தி பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[ot-video][/ot-video]

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் லஹிரு கைது..

Mohamed Dilsad

Showers expected in several areas – Met. Department

Mohamed Dilsad

The ‘Snyder Cut’ cause is pretty much dead

Mohamed Dilsad

Leave a Comment