Trending News

ஏதோ ஒன்று என் மனதை தொட்டது

(UTV|COLOMBO) – தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அதிக விருதுகளை வென்று வருகிறார்.

சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது, ” ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும். அதுபோன்ற கதாபாத்திரங்களை படங்களில் பார்த்திருக்கிறேன். அதில் நான் நடித்து இந்த அளவுக்குப் பிரபலமாகும் என தெரியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது. அவ்வளவு எளிமையான தோற்றம் அது. எளிமை என்றைக்குமே வரவேற்பைப் பெறும்.

காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என எண்ணுகிறேன். எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது. ஆனால் 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது’ இவ்வாறு திரிஷா கூறினார்.

Related posts

පළාත් පාලන ආයතන 263ක ට සභාපති තෝරන්න ඡන්දයක්

Editor O

හිටපු ඇමති රාජිතගේ නඩුවකට අධිකරණය දුන් නියෝගය

Editor O

News Hour | 06.30 am | 11.12.2017

Mohamed Dilsad

Leave a Comment