Trending News

மழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் மேலும் அதிகரிப்பு

(UTV|COLOMBO) – நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றும் நாளையும் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்சில இடங்களில் 100 -150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் கண்டி, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

ලාෆ් ගෑස් ගැන දැනුම් දීමක්

Editor O

E-health project to be launched in 200 hospitals

Mohamed Dilsad

இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு அதிகரிக்கும்?

Mohamed Dilsad

Leave a Comment