Trending News

சீரற்ற வானிலை – 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களிலுள்ள 7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் இருவர் உயிரிழந்துள்ளனர். முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 21 ஆகும். மேலும் 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 1,228 குடும்பங்களைச் சேர்ந்த 4,284 பேர் 444 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் அதிக மழை காரணமாக 42 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான தற்காலிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

Related posts

Robinho given nine-year prison sentence for rape

Mohamed Dilsad

பங்களாதேஷ் அணிக்கு அபார வெற்றி

Mohamed Dilsad

Hundreds missing in Laos hydroelectric dam collapse

Mohamed Dilsad

Leave a Comment