Trending News

இரவோடு இரவாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றம்

(UTVNEWS | COLOMBO) –யாழ்ப்பாணம் – பண்ணைப் பகுதியில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக இன்று அதிகாலையில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலைகள் எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டுள்ளது.

பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த பகுதியில் இரவோடு இரவாக புத்தர் சிலையை வைக்கத் திட்டமிட்டதாக நேற்று இரவு தகவல் வெளியாகியிருந்தது.

பின்னர், அந்த இடத்தில் இன்று காலை யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கூடினர்.
அவர்களின் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய சிலை அந்த இடத்திலிருந்து சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

Related posts

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

Mohamed Dilsad

Rupee ends weaker, State Bank Dollar sales cap fall

Mohamed Dilsad

“Think of displaced Muslims when celebrating” – Minister Bathiudeen

Mohamed Dilsad

Leave a Comment