Trending News

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கசுன் விலகல்

(UTV|COLOMBO) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜித்த உபாதை காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், கசுன் ராஜித்தவின் வெற்றிடத்துக்குப் பதிலாக குழாத்தில் மாற்று வீரர் பெயரிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராவல்பிண்டியில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அவர் காயமடைந்திருந்த நிலையில் அடுத்த போட்டியில் விளையாடுவதில் இவ்வாறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி கராய்ச்சி மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நித்யானந்தா உருவாக்கிய தீவை தனி நாடாக அங்கிகரிக்க கோரி ஜ.நா.விற்கு மனு [VIDEO]

Mohamed Dilsad

கோட்டாவுக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு

Mohamed Dilsad

Three dead and 3 injured in accident

Mohamed Dilsad

Leave a Comment