Trending News

இலங்கையில் மண்சரிவை குறைக்க அமெரிக்கா உதவி

(UTV|COLOMBO) – மழையுடன் கூடிய சீரற்ற காலநிலைகளில் இலங்கையில் மண்சரிவுகளைக் குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மண்சரிவு முகாமைத்துவம் தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவிற்கு கண்காணிப்பு உபகரணம் ஒன்றை பரிசளித்துள்ளதாகவும் ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கி­ணங்க, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் பொறியியலாளரும் புவியியல் நிபுணர்களும் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்து மண்சரிவு ஆராய்ச்சி உபகரணங்களை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன உரிமையாளரைக் கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Mohamed Dilsad

ரஜினிக்கு சரியான ஜோடி நானே…

Mohamed Dilsad

சவுதியில் கொலையுண்ட தமிழ்பெண் தொடர்பில் விசாரணைகள்

Mohamed Dilsad

Leave a Comment