Trending News

இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு

(UTV|COLOMBO) – அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகம், இன்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

தரைப்படை, கடற்படை மற்றும் விமான படை ஆகிய முப்படை பிரிவுகளின் தலைமையகங்களை ஒரே இடத்தில் அமைக்கும் நோக்குடன் பெலவத்த அக்குரேங்கொட பகுதியில் இந்த கட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

77 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் முப்படை தலைமையகத்திற்காக 53.3 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் அமைக்கப்பட்ட பாரிய கட்டட வேலைத்திட்டமாகவும் கருதப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி இதற்கான அடிகல் நாட்டப்பட்டது.

Related posts

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Mohamed Dilsad

இலங்கை கேந்திர நிலையமாக மாறுவதற்கு சீனா கைகொடுக்கும்…

Mohamed Dilsad

முதியோரை பராமரிக்காமை தொடர்பில் முறைப்பாடுகள்

Mohamed Dilsad

Leave a Comment