Trending News

இந்தியாவின் புதிய வரைப்படத்தில் காஷ்மீர் இணைப்பு

(UTVNEWS| COLOMBO) – மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இந்தியா வரைப்படத்தில் பாகிஸ்தானின் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் கதுவா, ஜம்மு, உதம்பூர், ரேசாய், அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபர்பாத், லே மற்றும் லடாக், கில்கிட், கில்கிட் வசாரத், சில்ஹாஸ் மற்றும் பழங்குடியினர் பகுதி என மொத்தம் 14 மாவட்டங்கள் இருந்தன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்நிலையில், முன்னர் 14 மாவட்டங்களாக இருந்த ஜம்மு-காஷ்மீர் தற்போது 28 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லைகளை விளக்கும் வகையில் புதிய வரைப்படம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குப்வாரா, பன்டிப்பூர், கன்டேர்பல், ஸ்ரீநகர், பட்காம், புல்வாமா, சோபியான், குல்காம், ரஜோரி, ரம்பான், டோடா, கிஷ்த்வார், சம்பா, கார்கில் ஆகியவை புதிய மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய வரைப்படத்தில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் முசாராபாத் பகுதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடனும் கில்கிட்-பல்டிஸ்தான் லடாக்குடனும் இணைக்கப்பட்டுள்ளது.

Related posts

LPL 2022 : Jaffna Kings කණ්ඩායමට ලකුණු 24 ක ජයක්

Mohamed Dilsad

95% SLFP organizers against joining SLPP: CBK

Mohamed Dilsad

பொசொன் நோன்மதி தினம் – அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை இலவச ரயில் சேவை

Mohamed Dilsad

Leave a Comment