Trending News

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

(UTV|COLOMBO) – இலங்கையுடன் அமெரிக்கா மிலேனியம் சவால் வேலைத்திட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் அந்த உடன்படிக்கைக்கு இலங்கை பாராளுமன்றம் அங்கீகாரம் அளிக்கவேண்டியது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மில்லேனிய சவால் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும் இலங்கை அரசாங்கம் அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பவேண்டும் இதுவே சர்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறை என அமெரிக்க தூதரகம் ஊடக அறிக்கை ஒன்றினை இன்று(01) வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக வாய்ப்பு பாராளுமன்றத்திற்கு கிடைக்கும் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் உடன்படிக்கை குறித்து ஆய்வு செய்யும் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய திட்டங்களை உருவாக்குவதற்குமான அவகாசம் கிடைக்கும் எனவும், மிலேனியம் சவால் உடன்படிக்கை காரணமாக 11மில்லியன் மக்கள் நேரடியாக பலன் பெறுவார்கள் எனவும் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ජනාධිපති සහ රුසියානු ජනාධිපති අතර නිල සාකච්ජා අද

Mohamed Dilsad

දිනකට අට දෙනෙකුට ජීවිතය එපාවෙයි..?

Editor O

GMOA island-wide token strike today

Mohamed Dilsad

Leave a Comment