Trending News

ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய எவருக்கும் தமது அரசில் பதவிகள் இல்லை

(UTV|COLOMBO) – ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய எவருக்கும் தமது அரசாங்கத்தின் கீழ் எந்தவித பதவிகளும் வழங்கப்படாது என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வெற்றியின் பின்னர், தேசிய பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குகள் பதவிக்கான நியமனத்திற்கு மாத்திரமே இதுவரை ஒருவரை பெயரிட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும், நாட்டில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட எவருக்கும் பதவி வழங்க தமது பேனையின் மூலம் கையொப்பம் இடப்பட்டு நியமனம் வழங்கப்பட மாட்டாது என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை நிறைவு

Mohamed Dilsad

மத்திய வங்கி பிணை முறி மோசடி-ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

Mohamed Dilsad

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment