Trending News

மரண தண்டனையினை நிறைவேற்ற இடைக்காலத் தடை உத்தரவு

(UTV|COLOMBO) – மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினை இன்று(05) பிறப்பித்துள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீர்மானித்திருந்ததுடன் அதன் முதற்கட்டமாக நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது

Mohamed Dilsad

ஓய்வு பெற தீர்மானித்துள்ள அண்டி மரே

Mohamed Dilsad

Parliament adjoined till Sept. 17

Mohamed Dilsad

Leave a Comment