Trending News

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

(UTV|COLOMBO)  நேற்று முன்தினம் கிளிநொச்சியில் விபத்து இடம்பெற்ற பகுதியில், பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேற்படி விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிளிநொச்சி – முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

 

 

Related posts

Gayle passes Lara’s Windies run record in 300th ODI

Mohamed Dilsad

Mother found hanged with son in Balangoda

Mohamed Dilsad

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment