Trending News

நாட்டு மக்களுக்கான பிரதமரின் விசேட உரை…

(UTV|COLOMBO) நாட்டின் அமைதி, அவசர கால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் தாம் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட விசேட உரையில் பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தப்பட்டு, இனவாத பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டால் நாடு சீர்குலையும்.

சில பிரதேசங்களில் பிரச்சினைகள் ஏற்படுவது வெசாக் பூரண தின நிகழ்வுகளை சீர்குலைக்கவே எனவும பிரதம் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வடமேல் மாகாணத்தில் அவ்வாறு முரண்பாடுகள் சில தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டு, பொருட்களுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டன.

எனினும் முற்படையினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனவே, சட்டத்தை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வர் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

Mohamed Dilsad

Hong Kong leader warns protesters not to push city into ‘abyss’

Mohamed Dilsad

Ortiz will not replace Miller as Joshua’s next opponent

Mohamed Dilsad

Leave a Comment