Trending News

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!

(UTV|INDIA) மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 133 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதி லீக் போட்டி (56) ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் வெற்றிபெற்ற மும்ப‍ை அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் லசித் மலிங்க 3 விக்கெட்டுக்களையும், ஹர்த்திக் பாண்டியா மற்றும் பும்ரான தலா  2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

 

Related posts

Former Sathosa Chairman arrested

Mohamed Dilsad

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு

Mohamed Dilsad

நிட்டம்புவ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்..

Mohamed Dilsad

Leave a Comment