Trending News

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?

(UTV|COLOMBO) வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை நிலையை கண்டறிந்து வந்த இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பல விடயங்களை தெளிவு படுத்தி இருப்பதாக பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

வில்பத்து வன சரணாலயம் அனுராதபுர,புத்தளம் மாவட்டத்திற்கு சொந்தமானது. முசலி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வில்பத்தின் எல்லைக்கு மிக மிக நீண்ட தூரத்திற்கு அப்பாலேயே இந்த முசலி பிரதேசம் அமைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இந்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீளக்குடியேற விரும்பினர். எனினும் அவர்களுக்கான காணிகள் இல்லாததால் கடந்த அரசாங்கத்தினால் மீள் குடியேற்றத்திற்கென உயர்மட்டக்குழுவொன்று அமைக்கப்பட்டு அவர்களின் சிபாரிசுக்கமைய காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இவர்களுக்கான காணிகள் முறைப்படியே வழங்கப்பட்டன. எனினும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அநேகமானோர் இன்னும் அந்த பிரதேசத்தில் மீள் குடியேறாமல் புத்தளத்திலே வாழ்கின்றனர்.

முஸ்லிம்கள் வில்பத்தை மாத்திரமல்லாது நாட்டின் எந்த காட்டையும் அழிக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன்.

புத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி புத்தளத்திற்கு விஜயம் செய்திருந்த போது அந்த பிரதேச மக்கள் குப்பை தொடர்பில் தமது எதிர்ப்பை தெரிவித்ததோடு அவரை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளிக்க முயற்சித்தனர் இதன் போது அங்கு சில மோசமான சம்பவங்கள் நடை பெற்றன. இந்த சம்பவத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட தாக்கப்பட்டுள்ளனர். மக்களின் ஜனநாயக உரிமைகளை ஏற்றுக்கொள்ள நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த விடயத்தையும் ஜனாதிபதிக்கு இராஜாங்க அமைச்சர் அஜித் மான பெரும எடுத்துரைக்க வேண்டுமென கோரிக்கை விடுகின்றேன்.

 

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

இரணைத்தீவு மக்கள் வறுமையில் போராட அவர்களின் வளங்களோ திருடப்படுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார

Mohamed Dilsad

செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி

Mohamed Dilsad

නෙවිල් ප්‍රනාන්දු පෞද්ගලික රෝහල අද රජයට(UPDATE)

Mohamed Dilsad

Leave a Comment