Trending News

செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி

(UTV|COLOMBO) இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தினூடாக மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு 8000 அடி உயரத்திலுள்ள மேகங்களைப் பயன்படுத்தி செயற்கை மழை பொழியச்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேகக்கூட்டத்தின் மீது இரசாயனங்களை வீசியதன் பின்னர் 45 நிமிடங்களுக்கு மழை பெய்ததாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக இரசாயணப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

Mohamed Dilsad

Elephant ‘Tikiri’ dies

Mohamed Dilsad

යාපනයට ගඟක් – උතුරේ ජල ගැටළුවට විසඳුමක්

Editor O

Leave a Comment