Trending News

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?

(UTV|AMERICA) அமெரிக்கா கண்டத்திலுள்ள ஹைத்தி நாட்டு மக்கள் பசியாற்றிக் கொள்ள, மண்ணை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மண் கேக் உண்ணும் பரிதாப நிலை, லூயிசெனா ஜோசப்பிற்கு மட்டுமல்ல. ஹைத்தி நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களுக்கு தற்போதைய சூழலில் இதுதான் பிரதான, சுவையான உணவு.

காசு கொடுத்து அரிசியோ, பழங்களோ, காய்கறிகளோ, மாமிசமோ வாங்க முடியாத ஏழை மக்களின் புதிய வகை உணவுதான் மண் கேக்.

வீடுகளில் மட்டுமே கிடைத்த மண் கேக், தற்போது வீதிகள் மற்றும் சந்தைகளில் விற்பனைக்கும் வந்துவிட்டன.

இந்த உணவு வயிறு சம்மந்தமான சில நோய்களுக்கு தீர்வு தரும் என்று வைத்தியர்கள் தெரிவித்தாலும் ஹைத்தியில் வாழும்  50 லட்சம் மக்கள், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்வதாக, ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

 

 

 

Related posts

“Come back to Sri Lanka as peace prevails in country” – Lankan Minister to Tamils

Mohamed Dilsad

“New Year will usher in joy and prosperity” – President

Mohamed Dilsad

Heavy traffic near Nelum Pokuna, Green Path

Mohamed Dilsad

Leave a Comment