Trending News

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

(UTV|COLOMBO) தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்.ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆளுநர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாண செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்
நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாரதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் செல்வந்தர்களின் அரசாங்கம் என்று சிலர் கூறியபோதிலும் செல்வந்தர் அரசாங்கத்தின் வறிய மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள் அடிக்கடி பெற்றுக் கொடுக்கப்படுகிறது. மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையும் தற்போதைய அரசாங்கத்தினாலேயே . புரட்சிவாத அரசாங்கத்தினால் மருந்து விலை குறைக்கப்படவில்லை. தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்கள் மீட்கப்படவேண்டும். தற்பொழுது தொற்றாநோய் பாரிய சவாலாகும் என்று கூறினார்.

 

 

 

 

 

Related posts

ලෝක බැංකුව රටවල් වර්ගීකරණය කරයි

Editor O

மக்களின் மகிமை இன்று கொழும்பிற்கு

Mohamed Dilsad

Hotline introduced to crackdown acts of sabotage

Mohamed Dilsad

Leave a Comment