Trending News

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது

(UTV|COLOMBO)-வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது.

9 வைத்தியர்கள் சேவையில் இருந்ததுடன் அதில் மூவர் விடுமுறையிலிருப்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டி.எம்.சி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றின் செயற்பாடுகளுக்காக 6 வைத்தியர்களின் சேவை போதுமானதல்ல என்பதால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் நோயாளர்கள் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்றுக்கு வர முடியும் என சுகாதார பிரதியமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Crocodile Shark discovered in UK waters for first time

Mohamed Dilsad

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு

Mohamed Dilsad

34th session of the UNHRC today

Mohamed Dilsad

Leave a Comment