Trending News

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள், காதலரை கை பிடிக்கிறார்

(UTV|AMERICA)-ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல முகங்களை கொண்டவர் அர்னால்டு. அவரது மகள் கேதரின் (வயது 29). இவர் ஒரு எழுத்தாளர்.

இவர் ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட்டை (39) கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்தார். இப்போது இவர்களின் காதல், திருமணத்தில் முடிய உள்ளது.

இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதை சமூக வலைத்தளம் ஒன்றில் கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார். அதில் அவர், “இனிமையான கேதரின், உன்னை மணந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னுடன் வாழப்போவதில் பெருமை அடைகிறேன். நாம் நமது வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கலாம்” என கூறி உள்ளார். நிச்சயதார்த்தம் தொடர்பான படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த கிறிஸ் பிராட் ஏற்கனவே நடிகை அன்னா பாரிசை காதலித்து மணந்து, அந்த ஜோடிக்கு ஜேக் என்று 7 வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிறிஸ் பிராட், அன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

London to host new Athletics World Cup

Mohamed Dilsad

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

Mohamed Dilsad

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment