Trending News

1000 லீற்றர் மதுவை குடித்த எலி?

(UTV|INDIA)-இந்தியா, உத்­த­ரப்­பி­ர­தேசம், பரோலி பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயிரம் லீட்டர் மது­வையும் எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையால் உயர் அதி­கா­ரிகள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

இதற்கு முன் பீஹார் மாநி­லத்­திலும் மதுவை எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தனர், கஞ்­சாவை தின்­று­விட்­ட­தாக ஜார்கண்ட் பொலி­ஸாரும், ரூபாய் தாள்களை சேதப்­ப­டுத்­தி­ய­தாக அசா­மிலும் எலி மீது பழி­போட்டு தப்­பித்­தி­ருந்­தது கவ­னிக்­கத்­தக்­கது.

பரேலி கண்­டோன்மென்ட் பொலிஸ் நிலை­யத்தின் சார்பில் சட்ட­வி­ரோத மது­போத்தல்கள், கள்­ளச்­சா­ராயம் ஆகி­யவை பறி­முதல் செய்­யப்­பட்டு போலீஸ் நிலை­யத்தில் உள்ள பாது­காப்பு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில், அந்த மது­போத்தல்­க­ளையும், கலன்­க­ளையும் நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைக்க பொலி­ஸா­ருக்கு உயர் அதி­கா­ரிகள் கடந்த புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டனர்.

மதுபோத்தல்களை வைத்திருந்த களஞ்சியசாலையை திறந்த பொலி­ஸா­ருக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அங்­கி­ருந்த போத்­தல்கள் அனைத்தும் வெறுமையா­கவும், கலன்­களில் மது இல்­லா­மலும் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, இங்கு நடந்த சம்­ப­வத்தை உயர் அதி­கா­ரி­க­ளுக்கு அறிவித்துள்ளனர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த பரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று இலங்கைக்கு விஜயம்

Mohamed Dilsad

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

வாவுனியாவில் பாரியளவு கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment