Trending News

பொலிஸாருக்கு எதிராக நாளாந்தம் 50 முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-பொலிஸாருக்கு எதிராக தினமும் சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 600ற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வருகைதாராமல் மாகாண மட்டத்திலும் தங்களின் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண மட்டத்தில், கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மாகாண மட்டத்தில் குழு நியமிக்கப்படவுள்ளது.

 

 

 

Related posts

Warner and Labuschagne smack centuries in day-night Pakistan Test

Mohamed Dilsad

Dakota Johnson wanted for “Call Me” sequel

Mohamed Dilsad

சீகிரிய பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயம்

Mohamed Dilsad

Leave a Comment