Trending News

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

(UTV|AMAPARA)-அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். இஸ்மாயில் அவர்களுக்கு சம்மாந்துறையில் நடாத்தப்பட்ட பாராட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதன் பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்திலும் பங்கு கொண்டார்.

அமைச்சர் பங்கேற்ற இந்த நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, முஸ்லிம் சமாதானக்கூட்டமைப்பின் தலைவர் ஹசனலி, செயலாளர் சுபைதீன், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப், இஸ்மாயில், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிர், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நௌசாட், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.முஜாஹிர், முசலி பிரதேச சபைத் தவிசாளர் கே.சுபியான், நிந்தவூர் பிரதேச சபை பிரதித் தவிசாளர் சுளைமான் லெப்பை, முசலி பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.றைசுதீன் பொத்துவில் எஸ்.எஸ்.பி.மஜீட், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான ஜவாத், மௌலவி ஹனீபா மதனி, அன்சில், ஏ.ஆர்,எம்.ஜிப்ரி, மாநகர சபை உறுப்பினர் முபீத் உட்பட கட்சியின் நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Litro assures steady LP gas supply

Mohamed Dilsad

සබ්බැරීනයක් අනතුරට ලක්වීමෙන් පුද්ගලයින් 06 දෙනෙකු ජීවිතක්ෂයට

Editor O

சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்; 90 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment